ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்து இந்த தீர்மானத்தினை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன். தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டதன் பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய சபையில் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.