தமிழ் பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இன்று முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் அறிமுக விழா நடைபெற்றது.
அந்தவகையில் ஜனாதிபதி வேட்பாளார் அரியநேந்திரன் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுதூபிக்கு பொது சுடரேற்றி, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி தேர்த்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி, சமூக செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.