”உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள குரங்கம்மை நோய்த் தொற்றுக்கு விரைவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்” என இந்தியாவின் சீரம் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அடார் பூனவல்லா தெரிவித்துள்ளதாவது” உலக சுகாதார ஸ்தாபனம் சமீபத்தில் குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.
இந்நிலையில் உலகளாவிய சுகாதார அவசரநிலையைக் கருத்தில் கொண்டு ஆபத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்ற இந்த நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இந்திய சீரம் நிறுவனம் தற்போது தீவிரமாக செயற்பட்டு வருகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.