தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமான புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகர சபை தலைவராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் இருந்த ஜி.ரி.லிங்கநாதன் இன்று ஸ்ரீ டெலோ அணியினருடன் இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீ டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி. ரி. லிங்கநாதன் உள்ளிட்ட பல முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.