சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை தீவிரமடைந்து வருகிறது.
இதனால், களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், மழையுடன் வீசிய கடுங் காற்று காரணமாகக் குறித்த பகுதிகளில் உள்ள 76 வீடுகளுக்குப் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.