இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்
ஏற்கனவே போலந்து சென்றுள்ள மோடி நாளை உக்ரைன் செல்ல உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, போலந்துக்கு இந்திய அரசுத் தலைவர் ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும் உக்ரைனுக்கு ஒரு இந்திய அரச தலைவர் செல்வது இதுவே முதல் முறை, அங்கு அவர் ஜானாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் சந்திக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது