தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தவைலர் இன்பராசா தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்த போது தமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி நிச்சயமாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தன் பிரகாரம் தாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்
மேலும் ,வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும்
வீணாக போராளிகளை அழைத்து விசாரனைகள் என்ற ரீதியில் கைதுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும்,
வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு தங்களூடாக உதவித்திட்டங்கள் மற்றும் பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தனர் எனவும் தெரிவித்தார்
இதேவேளை கடந்த காலங்களில் ரணில் ஒரு தந்திரவாதி என தெரிந்து கொண்டு தான் அவருடன் பேச்சுவார்த்தைக்கு அன்ரன் பாலசிங்கம் சென்றிருந்தார் எனவே ,தாமும் அந்த ரீதியிலேயே அவருக்கு ஆதரவை கொடுப்பதற்கு முன் வந்துள்ளதாகவும் ,தமிழ் மக்கள் சிலின்டர் சின்னத்துக்கு மாத்திரம் புள்ளடியிட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களை வெற்றியடைய வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்