இந்தியாவில் கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பலியாகியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பருவமழையின்போது தொற்றுநோய்கள் அதிகளவில் பரவுவது வாடிக்கையாக இருக்கிறது.
மேலும் அரிய வகை காய்ச்சலான மேற்குநைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவின. இதற்கு மத்தியில் எலிக்காய்ச்சலும் கேரளாவில் பரவியுள்ளது.
மேலும் எலிக்காய்ச்சலுக்கு அதிகளவில் உயிர் பலியும் பதிவாகியுள்ளது.அதற்கமைய, கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை எலி காய்ச்சலுக்கு உள்ளாகி 121 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 1,936 பேர் எலி காயச்சலால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த ஆண்டு 8 மாதங்கள் முடிவுறாத நிலையில் 121 பேர் பலியாகிவிட்டனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் எலி காய்ச்சலால் இறந்துள்ளனர்.
எலி காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்குமாறு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.