ஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் அவசர நிலையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிபிலி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
13 குழுக்களின் கீழ் சில பண்ணைகளில் உரிமையாளர்களே இந்த பணிகளை மேற்கொண்டனர்.
கடந்த 23ஆம் திகதி தொடங்கிய இந்த பணிகள் நேற்று மாலையில் நிறைவடைந்துள்ளது. இதில் மொத்தம் 11,700 கோழிகள் கொன்றழிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள வீடுகள் மற்றும் கிராமங்களில் கோழிகளை அழிக்கும் பணிகள் இன்று நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டள்ளது.