2025 ஆம் ஆண்டிற்கு, அவுஸ்ரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அந்நாட்டு அரசாங்கம் வேலை செய்துள்ளது.
இதன்படி, அடுத்த வருடம் நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 270,000 ஆக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் வீட்டு வாடகை பெறுமதிகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு மாணவர்கள் எதிர்பாராதவிதமாக நாட்டிற்கு வருகை தந்தமையே இதற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கொரோனா தொற்றுநோய் காரணமாக, நாட்டின் வணிகத் துறைக்குத் தேவையான பயிற்சி பெற்ற தொழிலாளர்களைப் பெறுவதற்காக புலம்பெயர்ந்த சமூகத்திற்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது