சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர்.
இந்த சம்பவத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதி அடையாளம் காண முடியாத அளவிற்கு அழிந்துள்ளதோடு மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன.
150 முதல் 200 பேர் வரை காணமல் போயுள்ளதுடன் ஏறக்குறைய 50,000 பேரின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.