நாட்டை எதிர்காலத்திலும் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளதென இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தொிவித்தாா்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”நாட்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மக்கள் பாரிய சவாலை எதிர்கொண்டனர்.
அந்த சவாலை ஏற்றுக்கொண்டு இன்று இந்த நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தியுள்ளார்.
நாட்டை எதிர்காலத்திலும் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுகின்றது.
நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும் மக்கள் தொடர்பாகவும் சிந்தித்தே ஜனாதிபதி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்பட்டு இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்பார்” என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மேலும் தொிவித்தாா்.