அரச வளங்களை விற்பனை செய்வதும் கடன்வாங்குவதிலுமேயே அரசாங்கம் அக்கறையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொிவித்துள்ளாா்.
கண்டியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்வியடம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”தீர்மானமிக்க ஒரு தேர்தலை நாம் எதிர்கொள்கின்றோம்.மக்கள் நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு பாரிய கடன்சுமையில் உள்ளது .அரச வளங்களை விற்பனை செய்வதும் கடன்வாங்குவதிலுமேயே அரசாங்கம் அக்கறையாக உள்ளது. இந்த நாட்டில் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய தலைமைத்துவம் ஒன்று தேவைப்படுகின்றது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஆட்சியில் நாட்டில் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான கொள்கை திட்டங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டை நெருக்கடியில் இருந்து விடுவித்து ஐக்கிய மக்கள் சக்தியில் ஆட்சியில் மக்களுக்கு சிறந்த எதிர்காலம் ஏற்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தொிவித்தாா்.