இனவாதம் என்பது நாட்டிலுள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டமே தவிர மக்களிடம் காணப்படும் விடயமல்ல எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் இளைஞர்களுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் நாட்டில் ஒரு அரசாங்கம் உருவாகியிருக்கவில்லை எனவும் குடும்ப ஆட்சியொன்றே நாட்டில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள பலரை தமது ஆலோசகர்களாக வைத்துள்ளார் எனவும், அவர்களிடம் ஆலோசனை பெறும் நிலையில் நாட்டின் ஜனாதிபதி உள்ளாரா? என்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆலோசகர் என்பவர் ஏதாவது ஒரு விடயத்தில் அதிக திறனையும் அனுபவத்தையும் கொண்டவராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.