கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று முதல் வருகையின் வரிசைக்கு அமைய கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்குச் சென்றுள்ள மக்கள் கடந்த சில நாட்களாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
உணவு, மலசலக்கூடம் உள்ளிட்ட வசதிகளின்றி நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருப்பதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்திருந்தனர்
மேலும் புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக வெளிநாட்டு நிறுவனமொன்றிடமிருந்து விலை மனு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்