சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) தலைவராக உள்ள நியூசிலாந்ததைச் சேரந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடைகிறது.
இந்நிலையில் அவர் 3 ஆவது முறையாக போட்டியிடமாட்டேன் என அறிவித்துள்ளார்.
இதனால் ஐ.சி.சி.,தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 27 ஆம் திகதிக்குள் வேட்புமனுக்களை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, ஜெய்ஷா பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்பதுடன் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவர் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.