ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.
தாய்நாட்டை செழிப்பான தேசமாக வழிநடத்தி அனைத்து பிரஜைகளின் வாழ்க்கையையும் பாதுகாப்பாக்குவதே நோக்கமாகும்.’ என சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கண்டியில் வைத்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பிரதம மகாநாயக்க தேரர்களுக்கு கைளியத்து வெளியிட்டு வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிடுவதற்கு முன்னதாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, அவர் மல்வத்தை மகாநாயக்கரிடம் சென்று ஆசி பெற்றுக் கொண்டதுடன் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் கையளித்துள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ள முக்கிய விடயங்கள் பின்வருமாறு,
வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்….
* வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்
* கடன் நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் சர்வதேச நாணய நிதியம்
* நிதி மற்றும் பரிமாற்ற விகித கொள்கை
* வருமான வளர்ச்சியை அடைதல்
* செலவுக் கட்டுப்பாடு
* பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்
* அரசுத்துறை முகாமைத்துவ மற்றும் டிஜிட்டல்மயமாக்கல்
* வலுசக்தி மற்றும் பயன்பாட்டு சீர்திருத்தங்கள்
* உற்பத்தி காரணி சந்தை சீர்திருத்தம்
* கமத்தொழில், மற்றும் கால்நடை அபிவிருத்தி
* காணி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம்
* போக்குவரத்து – நெடுஞ்சாலை, கடல் மற்றும் ஆகாயம்
* மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள்
* சுற்றுலாத் துறை
* விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி
* கைத்தொழில் துறை
* சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்துறை
* இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் துறை
* நிர்மாணத்துறை
* மின்சக்தி மற்றும் வலுசக்தி