சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது.
பேரணியின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தி சென்றதுடன் , பேரணியின் முடிவில் , அக்கினி சாட்சியாக தமக்கான நீதி கிடைக்கும் வரையில் போராட்டங்களை தொடர்வோம் என உறுதி எடுத்தனர்.
பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.