லெபனானில் வசிக்கும் தங்களது குடிமக்கள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், மோதல் தொடர்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இது விரைவில் மோசமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லேமி, அரசு சார்பில் நாங்கள் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. நிலைமை மோசமானால், மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தப்படலாம். இதனால் லெபனானில் உள்ள இங்கிலாந்து குடிமக்கள் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள் என்பதே எங்களின் எளிமையான வேண்டுகோள் எனத் தெரிவித்துள்ளார்.