சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.
எப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் நேற்று கால தாமதம் ஆன நிலையில், பார்முலா 4 பந்தயம் நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.
இதேவேளை, நேற்று பயிற்சி போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் பார்முலா 4 கார் பந்தயத்தின் பிரதான போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது. போட்டிகளை ஆர்வமாக கண்டுகளிக்க திரையுலகினர் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
குறிப்பாக, நடிகர்கள் நாக சைதன்யா, ஜான் ஆபிரகாம், நடிகர் திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.