அனைத்து மருத்துவமனைகளிலும் காவல்துறை மையத்தினை அமைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து,நாட்டில் உள்ள மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்தது.
அதன்படி, மருத்துவமனையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய திட்டத்தை தமிழக அரசு அமுல்படுத்தியது.
அந்தவகையில் மருத்துவமனை பணியாளர் பாதுகாப்புக்காக ஆலோசனை, பாதுகாப்பு என 2 குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும், மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும், மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவமனைகளில் கண்டிப்பாக ஒரு காவல்துறை மையம் அமைக்க வேண்டும் எனவும் மேற்குறிப்பிட்ட உத்தரவுகளை உடனே அமுல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.