கடவுச்சீட்டுவழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டமையினால் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மக்கள் தொடர்ந்தும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெறுவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் கடந்த பல நாட்களாக மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்
குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது
இதனையடுத்து கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக இணையவழி ஊடாக முன்கூட்டிபதிவு செய்யும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நாளாந்தம் 750 கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக மக்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக காத்திருந்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது
அந்த வகையில் இன்றைய தினமும் மக்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக வரிசையில் காத்திருந்ததனை அவதானிக்க முடிந்தது.