மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான ஸ்கொட்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் 9ஆவது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் டுபாய் மற்றும் ஷார்ஜாவில் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரை முன்னிட்டு ஏற்கனவே இந்தியா, அவுஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது அணியினரை அறிவித்து விட்டன.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஸ்காட்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேத்ரின் பிரைஸ் (Kathryn Bryce ) தலைவியாகவும், சாரா பிரைஸ்(Sarah Bryce )துணைத் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் லோர்னா ஜாக்-பிரவுன் (Lorna Jack-Brown), அப்பி ஐட்கன்-ட்ரம்மண்ட்( Abbi Aitken-Drummond ), அப்தாஹா மக்சூத் (Abtaha Maqsood), சாஸ்கியா ஹார்லி( Saskia Horley) க்ளோ ஆபெல்(Chloe Abel), பிரியனாஸ் சாட்டர்ஜி(Priyanaz Chatterji), மேகன் மெக்கால்(Megan McColl), டார்சி கார்ட்டர்(Darcey Carter), ஐல்சா லிஸ்டர்(Ailsa Lister), ஹன்னா ரெய்னே(Hannah Rainey), கேத்தரின் ப்ரேசர் (Katherine Fraser), ஒலிவியா பெல் (Olivia Bell)ஆகியோரும் குறித்த அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.