எரிபொருளின் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கட்டண திருத்தத்தை மேற்கொள்ளும் அளவுக்கு எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை.
கடந்த 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவினாலும்இ சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினாலும் குறைக்க இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தது.
மேலும்இ ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் 12 ரூபாவினாலும்இ ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.