”மணிப்பூரில் காலடி எடுத்துவைக்க பிரதமர் மோடி தயங்குவதேன்” என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது“’மணிப்பூர் மாநிலம் வன்முறையில் மூழ்கி 16 மாதங்கள் ஆகின்றன. ஆனால் உங்கள் ‘இரட்டை எந்திர’ அரசாங்கம், அதனைத் தணிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
அமைதி மற்றும் இயல்புநிலையை உறுதிப்படுத்த அனைத்து சமூக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மணிப்பூருக்கு இதுவரை நீங்கள் செல்லாதது குறித்து ஏன் கவலைப்படாமல் இருக்கிறீர்கள்? உங்கள் ஈகோ காரணமாகவே, மணிப்பூரில் அனைத்து சமூக மக்களும் பாதிக்கப்படுகின்றனர். திறமையற்ற, வெட்கமற்ற உங்கள் அரசால், அடிப்படையான சமாதான நடவடிக்கையைக் கூடத் தொடங்க முடியவில்லை.
மணிப்பூரின் எல்லைகளில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலும் பெரிய அளவில் உள்ளது. மணிப்பூர் மக்களைப் பாதுகாப்பதில் நீங்கள் மோசமாகத் தவறிவிட்டீர்கள். மணிப்பூருக்கு இதுவரை நீங்கள் செல்ல தயங்குவதேன்? இந்திய மக்களுக்கு நீங்கள் செய்த துரோகங்களின் நீண்ட பட்டியலில், மணிப்பூர் கொந்தளிப்பு முக்கியமானது.’ இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளார்.