• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை – சட்டமூலம் நிறைவேற்றம்

பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை – சட்டமூலம் நிறைவேற்றம்

Kavipriya S by Kavipriya S
2024/09/04
in இந்தியா, பிரதான செய்திகள்
69 1
A A
0
38
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற ஏதுவாக 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்துக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு அழைப்பு விடுத்தது. பாலியல் வன்கொடுமை தடுப்பு அபராஜிதா சட்டமூலத்தை மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் கட்டக் அம்மாநில சட்டப்பேரவையின்  முதல்நாள் சிறப்பு அமர்வின்போது அறிமுகம் செய்தார். அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் சட்டமூலம் ஒருமனதாக நிறைவேறியது.

‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் சட்டமூலம் 2024 ,மேற்குவங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்)’ என்ற தலைப்பில் இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழக்க நேரும்பட்சத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்குகள் மீதான விசாரணை ஆரம்ப அறிக்கை 21 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் மற்றும் அபராதம் விதிப்பதும் இந்த புதிய சட்டமூலத்தில் அடங்கியுள்ளது.

குடிமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களை சட்டத்தின் முன் முழு வலிமையுடன் சந்திப்பதை உறுதி செய்வதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம் மாநிலத்தின் உறுதிப்பாட்டுக்கு ஒரு சான்றாகும் என்று வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூன்றாவது முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழன்

Next Post

மணிப்பூரில் காலடி எடுத்துவைக்க பிரதமர் மோடி தயங்குவதேன்? – மல்லிகார்ஜுன கார்கே

Related Posts

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி!

2026-04-27
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!
இலங்கை

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!
இலங்கை

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

2026-04-27
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!
இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

2026-04-27
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!
இலங்கை

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

2026-04-27
யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

2026-04-27
Next Post
மணிப்பூரில் காலடி எடுத்துவைக்க பிரதமர் மோடி தயங்குவதேன்? – மல்லிகார்ஜுன கார்கே

மணிப்பூரில் காலடி எடுத்துவைக்க பிரதமர் மோடி தயங்குவதேன்? - மல்லிகார்ஜுன கார்கே

அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்!

அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வினை வழங்க வேண்டும்!

பிரதான முச்சக்கரவண்டி சங்கங்கள் ஜனாதிபதி ரணிலிற்கு ஆதரவு!

பிரதான முச்சக்கரவண்டி சங்கங்கள் ஜனாதிபதி ரணிலிற்கு ஆதரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

0
எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

0
பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி!

0
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

0
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

2026-04-28

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.