மட்டக்ளப்பில் ஜனாதிபதி ரணில் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில ரி 56 ரக துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வந்தவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞனின் உடமையில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர், வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச்சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழிலில் ஈடுபடும் நபரெனவும் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.