டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி வட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் இன்று மதியம் 12:58 மணியளவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இதுவரை சேதம் ஏதும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு வாரங்களுக்குள் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.