அடுத்த வாரம் பெர்லினில் ஆரம்பமாகவுள்ள லாவர் கிண்ண டென்னிஸ் போட்டியிலிருந்து ரஃபேல் நடால் (Rafael Nadal) விலகியுள்ளார்.
முழு உடற் தகுதியையும் மீட்டெடுக்க போராடுவதனால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக 38 வயதான ஸ்பெயின் வீரர் வியாழக்கிழமை (12) தெரிவித்தார்.
நடால் இறுதியாக ஓகஸ்ட் மாதம் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் சகநாட்டவரான கார்லோஸ் அல்கராஸுடன் தோல்வியுற்ற பின்னர் விளையாடவில்லை.
22 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியனான நடால், 2024 ஆம் ஆண்டு தனது இறுதி டென்னிஸ் சீசனாக இருக்கும் என்று முன்னர் கூறியுள்ளார்.
லாவர் கிண்ணமானது செப்டெம்பர் 20 தொடக்கம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.