யால தேசிய பூங்காவில் இருந்து 92 வகை பட்டாம் பூச்சி உட்பட நூற்றுக்கணக்கான பூச்சிகளை கடத்த முற்பட்ட இத்தாலிய பிரஜைகள் இருவருக்கு 60 மில்லியன் இலங்கை ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
68 வயதான தந்தையும், 28 வயதான அவரது மகனுமே இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த மே மாதம் யால தேசிய பூங்காவை இவர்கள் பார்வையிடச் சென்ற போது பூச்சிகள் கொண்ட போத்தல்களுடன் அவர்களை பூங்கா பாதுகாப்பு ஊழியர்கள் கைது செய்திருந்தனர்.
பின்னர், வழக்கு விசாரணையை எதிர்கொண்ட அவர்கள், பூச்சிகளை சட்டவிரோதமாக சேகரித்தமை, மற்றும் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டுக்காக செப்டெம்பர் மாத தொடக்கத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
மேலும்,மேற்படி அபராதத் தொகையும் அவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டது.
நாட்டில் வனவிலங்கு குற்றங்களுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்பட்ட சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.