திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள “அண்ணாமலை” என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் புரட்டாதி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பௌர்ணமி வருகிற 17-ந் திகதி காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ந் திகதி காலை 9.10 மணிக்கு நிறைவடைகிறது.
புரட்டாசி மாத பிறப்பன்று (17ஆம் திகதி) பௌர்ணமி வருவதாலும் அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.