ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையை 180,000 லிருந்து 15 லட்சமாக அதிகரிக்க ரஷ்ய ஜானாதிபதி விளாடிமிர் புடின் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி ரஷ்யாவில் மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 24 லட்சமாக உயரும் என கூறப்படுகிறது.
இதேவேளை ரஷ்ய-உக்ரைன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் புடின் உத்தரவிட்டிருப்பது இது மூன்றாவது முறையாகும். இந்த உத்தரவு வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ரஷ்யாவின் தெற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகள் ஊடுருவியதால் புடினின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யப் பகுதிக்குள் வெளிநாட்டு ராணுவம் படையெடுப்பது இதுவே முதல் முறை என அறிவிக்கப்பட்டுள்ளது