நாட்டின் பொருளாதாரம் என்ற தொங்கு பாலத்தை சிரமத்துடன் கடந்து எதிர்காலத்தை வளமாக்குவதற்காகவே மக்களின் ஆணையை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”நாட்டை இருளில் மூழ்கடிக்கின்ற, வரிசை யுகத்திற்கு இடமளிக்க வேண்டாமென அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே நான் மக்களின் ஆணையை கேட்கிறேன்.
நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுகிறோம்! இந்தப் பெருங்கூட்டத்தைப் பார்த்தால் எமது வெற்றி உறுதியாகிறது.
மக்களைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் என்னுடன் இணைந்தனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம்.
2025ஆம் ஆண்டில் மக்களின் வாழ்க்கைச் சுமையை இலகுவாக்க என்னால் முடியும். நாங்கள் இன்னும் தொங்கு பாலத்தில் இருக்கிறோம்.
இன்னும் கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தப் பயணத்தை மக்கள்தான் நிரந்தரமாக்க வேண்டும்.
தப்பித்து ஓடிய தலைவர்களை நம்ப முடியுமா? எனவே செப்டெம்பர் 21ஆம் திகதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை ஆதரவு வழங்கவேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.