கடந்த காலத்தில் விட்ட தவறை மீண்டும் இழைக்காமல் நாட்டினை வழிநடத்தக் கூடிய தலைவரைத் தெரிவுசெய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தொிவித்துள்ளாா்.
ஐக்கிய பெண்கள் சக்தி கொள்கை திட்டம் தொடர்பான ஆவணங்கள் இன்று கொழும்பில் வெளியிட்டு வைக்கும் நிகழ்வு ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமாதாச தலைமையில் இன்று இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் பெண் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஹிருணிக்கா பிரேமசந்திர,
”இனமத பேதம் இன்றி அனைவரையும் பாதுகாக்க கூடிய தலைவர் ஒருவரே நாட்டுக்கு தேவைப்படுகின்றது.
சஜித் பிரேமாதாச ஆட்சியில் அனைவரும் சமமாக பாதுகாக்கப்படுவார்கள்.
பெண்களை இல்லத்தரசிகளாக சிறந்த முகாமைத்துவம் மிக்கவர்களாக மாற்றப் புதிய திட்டங்கள் எம்மிடமுள்ளன.
எனவே இதனை நடைமுறைப்படுத்த நாட்டிற்கு பொருத்தமான தலைவரைத் தெரிவுசெய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
பெண்கள் கடந்த காலத்தில் விட்ட தவறை மீண்டும் இழைக்காமல் நாட்டினை வழிநடத்தக் கூடிய தலைவரைத் தெரிவுசெய்ய வேண்டும்.
ஏன் என்றால் நாட்டில் நுற்றுக்கு ஐம்பது வீதமானவர்கள் பெண்களே உள்ளனர். பெண்களால் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர மேலும் தொிவித்தாா்.