தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 24-ம் திகதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி பாரன்ஹீட் அளவு அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.