அமெரிக்கா நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெறவுள்ளது.
ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், எதிர்வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
இதேவேளை, 22 ஆம் திகதி நிவ்யோர்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன் 23 ஆம் திகதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்துரைக்கவுள்ளதுடன், இந்த பயணத்தின் போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.