ஜப்பானில் இசு தீவுகளுக்கு அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது
நிலநடுக்கம் ஏற்பட்ட 40 நிமிடங்களுக்குப் பின்னர், தீவுகளை சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கியதாக (50 செமீ) ஜப்பான் வானிலை ஆய்வு நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் கொசுஷிமா, மியாகேஜிமா மற்றும் இசு ஓஷிமா ஆகிய மூன்று தீவுகளிலும் சிறிய சுனாமிகள் கண்டறியப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சுனாமி அல்லது நிலநடுக்கம் காரணமாக இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ப்பான் வானிலை ஆய்வு நிலைய குறிப்பிட்டுள்ளது