புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கை மக்களுக்கு நிலையானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஆதரவு வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கை மக்களுக்கு நிலையான எதிர்க்காலத்தை உருவாக்க அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைக்கும் 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் பென் கார்டின், 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்திற்கும் உள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும், ஆளுகை, ஊழல் எதிர்ப்பு, மனித உரிமைகள் மற்றும் கடந்தகால அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் உண்மையான முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த பணியை புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் எதிர்கொள்ளும் என்று நம்புவதாகவும் பென் கார்டின் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜனநாயக மற்றும் பொருளாதார ரீதியாக நிலையான எதிர்காலத்தை நாடுவதற்கு இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.