யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களது 2 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்துள்ள கடற்படையினர் அவர்களை கடற்தொழிலில் நீரியல் வள திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.