2022 ஜனவரி முதல் 2024 மே வரை கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பயணம் செய்த 73,138 இந்தியர்களில் 29,466 பேர் இன்னும் திரும்பி வரவில்லை என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 17,115 பேர் 20-39 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 1,182 ஆண்கள் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சைபர் ஆட்கடத்தல் மோசடியில் சில இந்தியர்கள் சிக்கியிருப்பதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், இந்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் உள்ள குடியேற்றப் பணியகத்தால் தொகுக்கப்பட்ட தரவுகளில் இந்தப் புதிய விவரங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.