ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்த தினத்தன்று வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் 06 உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேலதிக சாட்சியத்தை எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதிக்கு எடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சைட் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்தை கண்டித்து 2016 பெப்ரவரி 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக தும்முல்லை உள்ளிட்ட வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியமைக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸார் இந்த வழக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது