மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையின் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று 2 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது.
ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய பாரிய தாக்குதல்கள் காரணமாக, மசகு எண்ணெய் விநியோக வலையமைப்பு முறிவடையும் சாத்தியம் இருப்பதாக மத்திய கிழக்கில் அச்சம் பரவி இருந்தது.
இதன் காரணமாக ப்ரெண்ட் ரக மசகெண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 1.63 டொலர்கள் அதிகரித்து 75.19 டொலர்களாக உயர்வடைந்தது.
அமெரிக்காவின் வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டெர்மீடியட் வகை மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 1.70 டொலர்கள் அதிகரித்து 71.53 டொலராக உயர்வடைந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மேலும் அதிகரிக்குமாக இருந்தால் மசகு எண்ணெய்யின் விலை மேலும் உயரும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.