சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டினை இலங்கை நட்சத்திரம் பிரவீன் ஜெயவிக்ரம ஒப்புக் கொண்ட நிலையில் ஐசிசி, அவருக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.
அதில் கடந்த ஆறு மாதங்கள் இடை நீக்கமும் அடங்கும்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர்பான குற்றச்சாட்டுகள், இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெயவிக்ரமவுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் ஐசிசியால் சுமத்தப்பட்டன.
அதில் அவர் ஐசிசியின் விதி மீறல்களை மீறியதை ஒப்புக் கொண்டார்.
2021 ஏப்ரல் மாதம் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்டில் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஜெயவிக்ரமா ஐந்து டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் இறுதியாக 2022 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 ஐ தொடரில் இலங்கைக்காக விளையாடினார்.
2021 எல்.பி.எல். போட்டியில் ஜெயவிக்ரமா தனது இரண்டாவது பட்டத்தை வென்ற ஜப்னா கிங்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.
அந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாடி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2024 எல்.பி.எல். போட்டியில் அவர் தம்புள்ளை அணிக்காக விளையாடினார்.