இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த அமெரிக்க வெடிகுண்டு புதன்கிழமை (02) தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகில் வெடித்தது.
இதனால், விமான நிலையத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன் 87 விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.
இந்த குண்டு வெடிப்பு விமான ஓடுபாதையில் 7 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தை ஏற்படுத்தியது.
இந்த வெடிப்பு சம்பவத்தினால் எந்த உயர் சேதமும், விமான சேதங்களும் ஏற்படவில்லை.
இந்த குண்டு போரின் போது தற்கொலைப் பணியில் ஈடுபட்டிருந்த “காமிகேஸ்” விமானங்களைத் தடுப்பதற்காக வீசப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஜப்பானின் தற்காப்புப் படையைச் சேர்ந்த வெடிகுண்டு செயலிழப்புக் குழு, 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டுதான் இந்த குண்டு வெடிப்புக்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்தியது.
குண்டுவெடிப்பு எப்போது வீசப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் ஒருவர் கூறினார்.
எனினும், உள்ளூர் ஊடகங்கள் இது இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தன.