மத்திய பெய்ரூட்டில் உள்ள கட்டிடம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பச்சூராவில் உள்ள பல மாடித் தொகுதியில் ஹெஸ்பொல்லாவுடன் இணைந்த சுகாதார மையம் இருந்தது.
இதனை இலக்கு வைத்து இஸ்ரேலிய படையினரால் துல்லியமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பெய்ரூட்டின் மையத்திற்கு அருகில் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.
இதேவேளை, லெபனான் பாராளுமன்றத்திலிருந்து சில மீட்டர் தொலைவில். தெற்கு புறநகர் பகுதியான தாஹியில் உள்ள இலக்குகளுக்கு எதிராக ஒரே இரவில் ஐந்து வான்வழித் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளைமையும் குறிப்பிடத்தக்கது.