புதிய பாதுகாப்புச் செயலாளராகப் பதவியேற்றுள்ள எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்தா (Sampath Thuyacontha ) நேற்றைய தினம் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரைத் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் பாதுகாப்புச் செயலாளர்பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவையும் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்தா பாதுகாப்புச் செயலாளராகப் பதவியேற்ற பின்னர் சிரஷ்ட அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.