முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இதன்போது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் .கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்
இதேவேளை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக 2000 கோடி ரூபாவை செலுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது