இராணுவ ரோந்துப் பணியைத் தவிர்க்க முயன்ற டிரக் வண்டியில் பயணித்த 33 புலம்பெயர்ந்தோர் குழு மீது மெக்சிகோ படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக மெக்ஸிகன் பாதுகாப்பு அமைச்சு புதன்கிழமை (02) கூறியது.
குவாத்தமாலாவின் எல்லைக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (01) மாலை நடந்த இந்த சம்பவத்தில் மேலும் 10 புலம்பெயர்ந்தோர் காயமடைந்தும் உள்ளனர்.
குறித்த டிரக் வண்டியில் எகிப்து, நேபாள, கியூபா, இந்திய மற்றும் பாகிஸ்தானிய நாட்டினரைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்.
எனினும், உயிரிழந்தவர்களின் தேசியங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
நான்கு புலம்பெயர்ந்தோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகினர்.