ஈரானின் எண்ணெய் தொழில் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா விவாதித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதை அடுத்து, சர்வதேச சந்தையில் வியாழன் (3) அன்று எண்ணெய் விலை 5% உயர்ந்தது.
அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 3.72 டொலர்கள் அல்லது 5.03 சதவீதம் உயர்ந்து 77.62 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெ் 3.61 டொலர்கள் அல்லது 5.15 சதவீதம் அதிகரித்து 73.71 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
எனினும், இது இந்த ஆண்டின் எண்ணெய் விலையின் தொடக்கத்தில் காணப்பட்ட அளவை விட குறைவாவே உள்ளது.
ஈரான் உலகின் ஏழாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது, அதன் உற்பத்தியில் பாதியை வெளிநாடுகளில் முக்கியமாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது.
இஸ்ரேல் மீதான ஈரானின் சுமார் 190 ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
தாக்குதல் எப்போது, எங்கு நடத்தப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும், ஆதாரங்கள் ஈரானிய முக்கிய எண்ணெய் நிலையங்கள் தாக்குதலில் இலக்கு வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பதிலடி உலக எண்ணெய் விநியோகத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்ற அச்சத்துக்கு மத்தியில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.