போலி ஆவணத்தை சமர்ப்பித்து இலங்கையில் கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை பாணந்துறை மற்றும் கொழும்பில் போலியான தேசிய அடையாள அட்டையை முன்வைத்து இலங்கை கடவுச்சீட்டை மோசடி செய்தமைக்காக டயானா கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.